நாகப்பட்டினம் துறைமுகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் தீவிரவாதம், எரிபொருள் கடத்தல் ஆகியவைகளை தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது.
இன்று காலை துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர் முகாமில் நுழைந்தார்.
தீவிரவாதியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பாக வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது 6 வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, அதிக அளவிலான பணம் , ஆகியவை இருந்தது.
இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர் சுற்றுலா வந்ததாகவும் வேலை தேடி வந்ததாகவும் உணவு தேடி வந்ததாகவும் மாற்றிமாற்றி தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.