இருமடங்காக உயர்ந்துள்ள இயற்கை எரிவாயு  விலை!

குழாய்வழியாக  வீடுகளுக்கு  வினியோகிக்கப்படும் சமையல்  எரிவாயு   உற்பத்திகளுக்கு  இயற்கை  எரிவாயு  பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயற்கை  எரிவாயு  விலையினை  6 மாதங்களுக்கு  ஒருமுறை  மத்திய  அரசானது  நிர்ணயிக்கிறது.

பெட்ரோலிய  அமைச்சகம்  நேற்று  விலையை  கடுமையாக  உயர்த்தி உள்ளது.  

மில்லியன்  பிரிட்டிஷ்  தெர்மல் யூனிட்டுக்கு  2.90 டாலராக  இருந்து வந்த அதன்  விலையை  6.10 டாலராக  உயர்த்தி உள்ளது. 

பொதுத்துறை  நிறுவனமான ஓஎன்ஜிசி க்கு  சொந்தமான  பழைய  எண்ணெய்  வயல்கள் உள்ளன.

அங்கு  எடுக்கப்படும்   இந்த   இயற்கை  எரிவாயுவிற்கு  விலை உயர்வானது  பொருந்தும்.  

ரிலையன்ஸ்  நிறுவனத்தில்  எடுக்கப்படும்  இயற்கை  எரிவாயுவின்  விலையானது  6.13 டாலரில்  இருந்து 9.92 டாலராக  உயர்கிறது.

இதன் மூலம்  மின்சாரம், உரம்  ஆகியவற்றின் உற்பத்தி  செலவுகள்  உயரும்.