நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீ்புரம் சிவசக்தி தியேட்டர் போகும் வழியில் "சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி" நடந்து கொண்டு வருகிறது.
நேற்று மதியம் 1 மணி அளவில் வங்கியில் தீ பிடித்தது.
அதனை பார்த்த வங்கியின் ஊழியர்கள் பதறியடித்து வெளியே வந்தனர்.
பின் கட்டிடத்தில் தீ பயங்கரமாக பத்தி எரிந்து கட்டிடம் முழுவதும் புகையாக காணப்பட்டது.
அதன் பின் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன.
அவர்கள் மூன்று வண்டியில் வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கியுள்ளன.
தீயை அணைக்க கட்டிடத்தின் சன்னல்களை உடைத்து தண்ணீரை ஊற்றினர் ஆனால் தீ அணையவில்லை.
பின் பொக்லைன் என்ற இயந்திரத்தை வரவழைத்து ஜன்னல் முழுமையாக உடைக்கப்பட்டது.
அதன் பின் அதிகமான புகையின் காரணமாக தீயணைப்பு வீரர்களுக்கு பணியில் ஈடுபட முடியவில்லை.
பின் இன்னும் இரண்டு தீயணைப்பு வாகனத்தை வரவைத்து தீயை அணைக்கும் வேலையில் இறங்கினர்.
பின் தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் கருவியை பொருத்தி தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.