யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து பாதை அமைப்பதால், அவை வழிதவறி ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது.

காடுகளுக்கும் மரங்களின் வளர்ச்சிக்கும் யானைகள் வலசை செல்லும் பாதைகள் மிக முக்கியமானவை, யானைகள் உண்ணும் உணவும் அதன் சாணமும் தான் காடுகள் செழித்து வளர உதவுகின்றன.

யானைகள் நாள் ஒன்றுக்கு பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று உணவு தேடும் பழக்கம் கொண்டவை.  

ஆனால் யானையின் வலசை பாதையில் மனிதர்கள் குறுக்கிட்டு சுவர்கள் கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவைகள் குழம்பி போய் விடுகின்றன.

நீலகிரி மாவட்டம் கில்புரோ ரயில் நிலையம் அருகே யானைகள் வலசை பாதையில் திடிரென்று சுவர் கட்டப்பட்டுள்ளதால், யானை கூட்டம் ஓன்று தடுமாறி நிற்கிறது.

எங்கே போவது? எப்படி போவது? நமது வலசை பாதை எங்கே போனது? என்று அந்த கூட்டமே குழம்பி நிற்கிறது.

தாய் யானையை பின்பற்றி குட்டிகள் வழிவழியாக வலசை பாதையை  பயன்படுத்துபவை, தாய் யானை இறந்த பின்னர், குட்டி வளர்ந்து அதே பாதையில் தன்  குடும்பத்தை வழிநடத்தும். 

வனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய ஆதாரமான, தங்களின் வலசை பாதையை வழிமறித்து இப்படி சுவர் எழுப்புவது சரிதானா? 

பாவம்   யனோ  விலங்குகளுக்கு கேள்வி கேட்க வாய் இல்லை. 

அதனால் ஆட்டம் போடுகிறான் அகங்காரம் பிடித்த மனிதன் என்று தான் கருத வேண்டி உள்ளது.