பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான  தொடரில் வீரர்கள் நிதான  பேட்டிங்!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா  இடையேயான  முதலிரண்டு  போட்டிகளும்  டிராவான  நிலையில்,  மூன்றாவது  டெஸ்ட்  போட்டி  நடந்து வருகிறது.

டாஸ்  வென்று  முதலில்   பேட்டிங்  ஆடிய ஆஸ்திரேலிய  அணி  முதல் இன்னிங்ஸில்  391 ரன்களை  அடித்தது.

  தொடக்க வீரரான  உஸ்மான் கவாஜா  அபாரமாக பேட்டிங்  ஆடி  91 ரன்களை  அடித்தார்.

ஸ்மித்  என்பவர்  59 ரன்களை  அடித்துள்ளார்.  

 அலெக்ஸ்  கேரி  67 ரன்களையும், கேமரூன்  கிரீன்  என்பவர்  79 ரன்களையும்  எடுத்துள்ளார்.

பாகிஸ்தான்  அணியின்  தொடக்க வீரர் 11 ரன்னில்  ஆட்டமிழந்தார்.

மற்றொரு  தொடக்க  வீரர்  அப்துல்லா ஷாஃபிக்கும், அசார் அலியும்  இணைந்து  நிதானமாக ஆடிவருகின்றனர்.

அப்துல்லா ஷாஃபிக் 45 ரன்கள்,  அசார் அலி  30 ரன்கள் எடுத்து களத்தில்  உள்ளனர்.