உக்ரைன் குழந்தைகளின்  முதுகில்  குடும்ப விவரங்களை  எழுதும் பெற்றோர்!

ரஷ்யா உக்ரைனுக்கு  எதிரான  போர்  தாக்குதலை  நாளுக்கு நாள்  தீவிரப்படுத்தி  வருகிறது.  

ரஷ்ய படைகள்  தற்போது  பொதுமக்களை  கொன்று  வருவதாக  உக்ரைன் அரசு  குற்றம்சாட்டி  வருகிறது. 

உக்ரைன்  மக்கள்  அங்கு  கடும்  அச்சத்தில்  உள்ளனர்.

இந்த நிலையில்  ஒரு  குழந்தையின்  புகைப்படம்  சமூக வலைத்தளங்களில்  வைரலாகி  வருகிறது.

உக்ரைன்  மக்கள்   குழந்தைகளின்  முதுகில் தங்கள்  குடும்பம்  தொடர்பான  தகவல்களை  எழுதி  வருகின்றனர். 

உக்ரைனின் தாய்மார்கள் கொல்லப்பட்டுவிட்டால்  குழந்தைகள் காப்பாற்ற படவேண்டும்  என கூறியுள்ளனர்.

அவர்களது  குழந்தைகளின்  உடல்களில்  குடும்பம் தொடர்பான  தகவல்களை  எழுதுகிறார்கள்.