பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகள் அதிகரிப்பு!
ஐந்து மாநிலத்தில் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்தது.
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது.
137 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்ந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.