பப்ஜி மதனுக்கு சிறையில் வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்காக, லஞ்சம் கேட்ட  உதவி ஜெயிலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன? சிறை அதிகாரி சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம்.

ஆபாச பேச்சுடன் பப்ஜி விளையாடி இணையதளத்தில் வெளியிட்டதாக, கடந்த ஆண்டு பப்ஜி மதன் அவரது மனைவி கீர்த்திகா ஆகியோர் கைது செய்யபட்டனர்.

கீர்த்திகா ஜாமினில் வெளியே வந்ததை அடுத்து  பப்ஜி மதன் மீது குண்டார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

புழல் சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதனுக்கு கடந்த டிசம்பர் மாதம் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.

அவரை நன்கு கவனித்து கொள்வதற்காக மதனின் மனைவி கீர்த்திகா உதவி ஜெய்லரை தொடர்பு கொள்ள  அவர் லஞ்சம் கேட்டதாக கூறபடுகிறது.

இது தொடர்பாக ஆடியோவும் வெளியாகியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் என கூறி கொண்டு உதவி ஜெயிலர் செல்வத்தை மிரட்டும் ஆடியோவும் வெளியானது.  

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள பட்டுள்ளது.

உதவி ஜெயிலர் செல்வம் 25 ஆயிரம் ரூபாய் கூகிள் பை யில் பெற்றது உறுதி செய்யப்பட்டதாக கூறபடுகிறது. 

இதனால் அவரை பணியிடை  நீக்கம் செய்து சிறை  துறை டி.ஜி.பி சுனில் குமார் ஷிங் உத்தரவிட்டுள்ளார்.