ஐபிஎல் டி20 போட்டியில் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ்! வில்லியம்சன் அளித்த பேட்டி!

15 ஆவது  சீசனின்  போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதின.

இந்த இரண்டு  அணிகளுக்கும்  கடந்த சீசன்  சரியாக  அமையவில்லை.   

நேற்றையதினம்  நடைபெற்ற போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ்  சன்ரைசர்ஸ்  ஹைதராபாத்தை  61 ரன்கள்  வித்தியாசத்தில்  வீழ்த்தியது.   

டாஸ் வென்ற  ஹைதராபாத்  அணியின்  கேப்டன்  கேன்  வில்லியம்சன்  பந்துவீச்சை  தேர்வுசெய்தார்.

முதலில்  பேட்டிங்  செய்த  ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு  210 ரன்களை  எடுத்துள்ளது.  

அதிகபட்சமாக  அந்த அணியின்  கேப்டன் சஞ்சு  சாம்சன் 27 பந்துகளில்  55 ரன்களை  எடுத்துள்ளார்.

போட்டி முடிந்த பிறகு  பேசிய  சன்ரைசர்ஸ்  ஹைதராபாத்  அணியின்  கேப்டன் நாங்கள் தொடங்கிய விதம் நன்றாக இருந்தது.  

நல்ல வாய்ப்புகள் கிடைத்ததை  நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை  என கூறினார்.

இவர் இளம் வீரர் என்றாலும்  சென்ற ஆண்டு கற்ற அனுபவங்களை  நன்றாக  பயன்படுத்தியுள்ளார்.