சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் டான்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
டான் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.
கடைசி 30 நிமிடங்கள் அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.