அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில்! கட்டுமான குழு கமிட்டியின் அறிக்கை!

உத்தரபிரதேசம்  மாநிலம்  அயோத்தியில்  ஸ்ரீராமருக்கு  கோவில் கட்டும் பணிகள் கடந்த  பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது.

 பீடம் கட்டுவதற்கு சுமார் 17,000 கற்கள் பயன்படுத்தப்படுகிறது.  

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து  கற்கள் கொள்முதல்  செய்யப்படுகின்றன.

மூன்று அடுக்குகளை  கொண்ட கோவிலின்  பணிகள்  திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து வருகின்றன.  

கருவறைக்கான பீடம்  பணிகள்  முடியும் தருவாயில் உள்ளது.

கீழ்தளத்தில்  கோவில் கருவறை பணிகள் டிசம்பர் 2023க்குள்  கட்டி முடிக்கப்படும்   என கூறப்படுகிறது.