மும்பையில்  நடைபெற்ற  ரன்பீர் கபூர்- அலியா பட் திருமணம்!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் திருமணம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

நடிகர் ரிஷிகபூரின் மகன்  ரன்பீர் கபூர் இந்தியில் முன்னணி நடிகராக உள்ளார்.

 இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும் நடிகையுமான அலியா பட்டை காதலித்து வந்தார்.

இவர்கள் சில வருடம் கழித்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி மும்பையில் நேற்று முன்தினம் மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது.

 ரன்பீர், அலியாவுக்கு நேற்று மாலை திருமணம் நடைபெற்றது. 

திருமண விழாவில் நடிகர்கள், திரையுலகினர் கலந்துகொண்டனர்.