முள்ளிவாய்க்கால்  போர் நினைவு தினத்தில்  முதல் முறை  சிங்களர்கள் அஞ்சலி!  

இலங்கையின்  ராணுவத்தினருக்கும்,  தமிழ் ஈழ விடுதலை புலிகள்  இயக்கத்துக்கும்  இடையில்  போர் நடைபெற்று வந்தது.  

கடந்த 2009 ஆம் ஆண்டு   முள்ளிவாய்க்கால்  பகுதியில்  இறுதிக்கட்ட  போர் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை புலிகள் தலைவர்  வேலுப்பிள்ளை  பிரபாகரன்  இலங்கை  ராணுவத்தால்  கொல்லப்பட்டார்.

ஆயிரக்கணக்கான  தமிழர்களை   கொன்று குவித்ததாக  அந்த நாட்டு தமிழர்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

முள்ளிவாய்க்கால்  13 ஆவது  நினைவு  தினம்  புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.  

 இந்த அஞ்சலி நிகழ்ச்சியில்  பௌத்த துறவிகள், ஹிந்து அர்ச்சகர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் பங்குபெற்றனர்.