டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த அல்ட்ரோஸ் DCT!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் DCT வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இந்த புதிய டாடா அல்ட்ரோஸ் DCT விலை ரூபாய் 8.10 லட்சம் என துவங்குகிறது.
இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 9.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் இது DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.
இந்த எஞ்சின் ஆனது 86 ஹெச்பி திறன், 113 நியூட்டன் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய வானிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாகி இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது கியர்பாக்ஸ் ஷிஃப்ட்-பை-வயர் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாகியுள்ளது.
DCT மாடல் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.