பதினொன்றாம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியை கைது!

சிக்கத்தம்பூர்  பகுதியை சேர்ந்த  ஷர்மிளா என்பவர்  ஆசிரியராக  பணிபுரிந்து  வருகிறார்.

அதே பள்ளியில்  11 ஆம்  வகுப்பு  படிக்கும் மாணவனும்  இவரும்  காதலித்து  வந்ததாக  கூறப்படுகிறது.

இவர்  பள்ளி  மாணவனுடன்  திடீரென  மாயமானது  அப்பகுதியில்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 இதனை குறித்து  மாணவனின்  பெற்றோர்  துறையூர்  காவல்  நிலையத்தில்  புகாரினை  அளித்தனர்.

போலீசார்   வழக்குப்பதிவு  செய்து  தீவிர விசாரணை  செய்தனர்.

காணாமல்போன  மாணவன்  திருச்சி   புதூரில்  உள்ள  ஒரு வீட்டில்  தங்கி இருப்பது  தெரிய வந்துள்ளது. 

விசாரணையில்  ஆசிரியரும், மாணவனும்  தஞ்சை  பெரிய  கோவிலுக்கு  சென்று  திருமணம் செய்துள்ளது  தெரியவந்துள்ளது. 

 பின்னர்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியரை  பெண்கள் சிறையில் அடைத்தனர்.

அந்த மாணவன்  திருச்சியில் உள்ள காப்பகத்தில்  அடைக்கப்பட்டான்.