திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்  கோதண்டன் வயது 55. 

இவரது மனைவி சிந்து வயது 48.  

வீட்டின் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு அவர்  பார்த்தார் .

அப்போது, பீரோ இருக்கும் அறையில் ஒரு நபர்  பணம், நகையை திருடுவதைக் பார்த்த  கோதண்டன்  கதவை பூட்டிவிட்டு சத்தம் போட்டார்.

அங்கு வந்த  பொதுமக்கள் நபரை பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

விசாரணையில், அந்த நபர் அதேபகுதியைச் சேர்ந்த வினோத் வயது 20என்று தெரிய வந்துள்ளது.