10 ஆண்டுகளாக விஜய் பேட்டி அளிக்காததற்கான காரணம்!

பீஸ்ட் படத்தின்  3 பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன.

 நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நேர்காணல் ஒன்றில் பேசினார்.

பீஸ்ட் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதிலளித்தார்.

 10 ஆண்டுகளாக  நேர்காணல் எதுவும் கொடுக்கவில்லை என விஜய்யிடம் நெல்சன் திலீப்குமார் கேள்வி எழுப்பினார்.

ஒரு நேர்காணலில் நான் சொன்ன விசயத்தை தவறாக புரிந்துகொண்டு வேறுவிதமாக எழுதினார்கள்.

அதைபார்த்து என்னிடம் பலர் கேள்வி எழுப்பினர்.

இதுபோன்ற பிரச்சனைகள் வருவதால் நேர்காணல் கொடுக்காமல் இருந்து வந்தேன்." என்றார்.