திடீர் அறிவிப்பால்  கார்  வாங்குபவர்களுக்கு ஏற்பட்ட துயரம்!

அனைத்து  கார்களின்  விலைகளையும் உயர்த்தவுள்ளதாக  மாருதி சுஸுகி  நிறுவனம்  தற்போது  அதிரடியாக அறிவித்துள்ளது. 

கார் மாடல்களை  பொறுத்து  விலை  உயர்வு  மாறுபடும்  என தெரிகிறது.  

இந்திய  சந்தையில்  இந்த நிறுவனம்  கார்களின்  விலைகளை  தொடர்ச்சியாக  உயர்த்தி  கொண்டே  வருகிறது.

ஜனவரி  மாதத்தில்  மாருதி  சுஸுகி  நிறுவனம்  கார்களின்  விலையை  8.8 சதவீதம்  வரை  உயர்த்தி  உள்ளது.  

 பல்வேறு  நிறுவனங்களும்  விலை  உயர்வு  குறித்த  அறிவிப்பை  வெளியிட்டுள்ளன. 

ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ  போன்ற  சொகுசு  கார்  நிறுவனங்கள்  கார்களின்  விலைகளை  உயர்த்தி  விட்டன.

டொயோட்டா  நிறுவனமும்  இந்தியாவில்  அவர்களது  கார்களின்  விலைகளை  உயர்த்தியுள்ளது.