அப்டேட் செய்யப்பட்ட  புதிய  கைகர்  மாடல்  மாற்றங்கள்!

2022 ரெனால்ட்  கைகர்  மாடல்  இந்திய சந்தையில்  விற்பனைக்கு  அறிமுகம்  செய்யப்பட்டு  உள்ளது.

இதில்  வெளிப்புறம்  சில அப்டேட்கள், புதிய அம்சங்கள்  போன்றவை  வழங்கப்பட்டு  உள்ளன.

முன்புற  பம்பரில்  சில்வர் ஸ்கிட் பிளேட், டெயில் கேட்டில் புதிய குரோம்  கார்னிஷ்  செய்யப்பட்டு  உள்ளது.

கைகர்  மாடலில்  குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங்  போன்ற  வசதிகள்  வழங்கப்பட்டு  உள்ளன.  

இவை  எந்த  வேரியண்டில்  வழங்கப்படும்  என்பதை   ரெனால்ட்  நிறுவனம்  தெரிவிக்கவில்லை.

இதன்  அனைத்து  வேரியண்ட்களிலும் PM2.5 ஏர் ஃபில்ட்டர்  பொருத்தப்பட்டு  உள்ளது.

1.0 லிட்டர்  பெட்ரோல்  எஞ்சின், 1 லிட்டர் டர்போ  பெட்ரோல்  எஞ்சின் போன்ற இரண்டு  முறைகளில்  கிடைக்கிறது.