நல்ல கதைகளை கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்றேன்னு சந்தோசமா இருக்கு.
ஆனால் இயக்குனர்கள் முதலில் என் படத்தை இயக்கிட்டு அப்புறம் பெரிய ஸ்டார் படங்களுக்கு போறது ரொம்ப வருத்தமா இருக்கு.
என்னுடைய ராட்சன் படம் ரொம்ப ஹிட் ஆச்சு ஆன என்னுடைய 8 படம் டிராப் ஆச்சு.
என் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெற்றி பெறவில்லை அதை வச்சு என்ன கால்குலேட் பண்ணிட்டாங்க.
பின் ஒரு படம் நடித்தேன் அது மூன்று கொரோனாவிற்கு பின் வெளிவருது.
இயக்குனர் முதலில் கதை சொன்னார் பின் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
ஆனால் பதட்டம் அதிகமா இருந்து நான் இந்த படத்திற்கு சமாதித்ததற்கு காரணம் என் நண்பன் சையத் முஹம்மது.
அவன் ஒரு கிரிக்கெட் பிளேயர் அவன் சச்சின் டீம் விக்கெட் எடுத்திருக்கான் சில காரணங்களால் அவனுக்கு கிரிக்கெட்டைத் தொடர முடியவில்லை.
இந்த படத்தின் கதையை அவனுக்கு கால் பண்ணி சொன்னேன் ரொம்ப சந்தோஷம் பட்டான்.
இந்த படத்தை பார்த்து உதயநிதி ரொம்ப நல்லா பண்ணிருக்க டைம் வரும் போது வெளியிடலாம் என கூறினார்.
தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ணணுமோ என உதயநிதி கேட்டாரு நான் ஆமா! என்று சொன்னேன்.