திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன் மலை சுப்ரமணியர் கோவிலில்  புதிய பொருட்களை வைத்து பூஜை தொடங்கியுள்ளது.  

இதன் மூலம் எதிர்காலத்தில் எந்த வித ஆபத்துகளை உலகம் எதிர்கொள்ளவிருக்கிறது. 

சிவவாக்கியரால் பாடல்பெற்ற தலமான சுப்ரமணிய சுவாமி கோவில் சிவன் மலையில் அமைந்துள்ளது. 

நாட்டில் நிகழவிருக்கும் அசம்பாவிதங்களை முன்கூட்டியே உணர்த்தி வருவதால், காரணமூர்த்தி என்றழைக்கப்படும் சுப்ரமணியர்.

கோவிலில் எங்கும் காணப்படாத உத்தரவு பெட்டி என்ற ஓன்று இந்த கோவிலில் அமைந்துள்ளது.  

ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளின்  காரணமாக நாட்டில் ஆக்கம், அழிவு, போன்ற செயல்கள் நடைபெறும் என்பது ஐதீகம். 

தங்கம் வைத்து பூஜை செய்த போது தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. 

அந்த வகையில் அண்மையில் கோகுல் என்பவரின் கனவில் உத்தரவு வந்ததாக கூறிய நிலையில், அதன் படி சுவாமி சன்னதியின் முன்பாக பூ வைத்து பார்க்கப்பட்டது. 

அதில் சிகப்பு பூ வராமல் வெள்ளைப்பூ வந்ததை அடுத்து, கனவில் வந்த பொருட்களை உத்தரவு பெட்டிக்குள் வைத்துள்ளனர்.

சிறிய செம்பில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் சிவலிங்கத்தை வைத்து, அதனுடன் ஒரு சங்கு, நாணயங்கள், மணல் ஆகியவற்றை  உத்தரவு பெட்டிக்குள் வைத்துள்ளனர்.  

இந்த உத்தரவிற்கான காரணம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும் என குருக்கள் மற்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.