படம்
மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சாதனை
அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்று தந்தது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் வசூலில் 200 கோடி வெற்றியை தந்து சாதனை படைத்துள்ளது.

மீண்டும் கூட்டணி
இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்குனருடன் மூன்றாவது முறையாக அஜித் 61 படத்தில் இணைகின்றனர். பூஜை போடப்பட்ட அஜித் 61 படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

கதாபாத்திரம்
பல ஆண்டுகள் கழித்து அஜித் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் 61 படப்பிடிப்பு
தற்போது படத்தினை குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்துள்ளது. சென்னையில் 7-10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறதாம். 9ஆம் தேதி படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.