விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. கமல் எழுதி அனிருத் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

சூர்யா
இந்த விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும், அவர் கிளைமாக்சில் காணப்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. மே 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா தோன்றுவார் என தகவல்கள் கூறுகின்றன.

திரைப்படம்
உண்மையில் சூர்யாவின் ஈடுபாடு குறித்து சில நாட்களில் தெரிய வாய்ப்புகள் உள்ளது. இந்த படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காயத்ரி, மைனா நந்தினி, வி.ஜே மகேஸ்வரி ஆகிய நட்சத்திர நடிகர்களை கொண்டுள்ளது.