மும்தாஜ்
டி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். “மோனிஷா என் மோனாலிசா” படத்தில் நடித்த பிறகு பல படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார்.

போன்
நடிகை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சென்னை அண்ணா நகரில் உள்ள எச்.பிளாக் பகுதியில் வசித்து வருகிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக நடிகை வீட்டில் வேலை செய்வதாக மைனர் பெண்ணிடம் இருந்து போலீசாருக்கு போன் வந்துள்ளது. வேலையில் தற்போது அவர்கள் தொடர விரும்பவில்லை என்றும், முதலாளிகள் அவர்களை அனுமதிக்கவில்லை என்றும் போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளனர்.

விசாரணை
போலீசார் நடிகை மும்தாஜ் வீட்டிற்கு விரைந்து சென்று சகோதரிகளை போலீஸ் காவலில் எடுத்து அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். சிறுமிகள் ஏதேனும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டார்களா என குழந்தைகள் நலத்துறை விசாரித்து வருகிறது.