Yamaha Libero Retro Bike! : மாற்றங்களுடன் வெளிவந்துள்ள யமஹா லிபரோ ரெட்ரோ பைக்!

0
134

வாடிக்கையாளர்கள்

தற்போது எங்கும் கொடிகட்டி பறப்பது ரெட்ரோ ரக பைக்குகள் ஆகும். எந்த ஒரு டெக்னாலஜி வசதிகளும் இல்லாமல் முற்றிலும் பழைய வடிவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களை வாங்க பல வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். பல நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில் யமஹா லிபரோ பைக்கை ரெட்ரோ மாடலாக மாற்றி களமிறக்கியுள்ளது.

யமஹா

ஐதராபாத்தை தளமாக கொண்ட எய்மோர் கஸ்டம்ஸ் யமஹா லிபரோவை ஒரு கவர்ச்சியான பைக்காக மாற்றியுள்ளது. யமஹா நிறுவனத்தின் கிளாஸிக் பைக்கான RX100-ன் மாடலாக லிபரோ உருவாக்கப்பட்டது. இந்த பைக்கானது அப்போது வெளியான அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளில் ஒன்றாகும்.

தோற்றம்

பைக்கின் வெளிப்புறம் அசல் மேட் பிளாக் ஸ்டீல் விளிம்புகளுடன் சங்கி டயர்களால் கவர் செய்யப்பட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. கவர்ச்சியூட்டும் விதமாக மஞ்சள், கருப்பு பின்ஸ்ட்ரைப்களால் நிரப்பப்பட்ட பச்சை டேங்கில் யமஹா லோகோ பொருத்தப்பட்டுள்ளன.

மாற்றங்கள்

முன் ஃபோர்க்குகள் இரண்டு முனைகளிலும் டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ரவுண்ட் ஹெட்லேம்பில் மெஷ்-ஸ்டைல் கார்டு தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ட்வின்-பாட் யூனிட்களுடன் அசல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் மாற்றப்பட்டுள்ளது. சுவிட்ச் கியர்களும் இதில் மாற்றப்பட்டுள்ளது.

எஞ்சின்

இந்த பைக்கிற்கு யமஹா லிபரோவின் ஒரிஜினல் எஞ்சின் வைக்கப்பட்டிருந்தாலும், சிறிய தோற்றம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 7.7பிஎச்பி, 7.8என்எம் செயல்திறனை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சினை பாதுகாக்க இரும்பு தகடு பொருத்தப்பட்டுள்ளது.

இருக்கை

டைமென்ட் ஸ்டைல் டிசைனில் தோலால் ஆன இருக்கை இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற இருக்கைக்கு அருகில் டர்ன் இண்டிகேட்டர்களுக்கான டெயில்லைட்டுகள் காணப்படுகின்றன. சில மென்மையான மாற்றங்களுடன் யமஹா ரெட்ரோ பைக் பட்டையை கிளப்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here